valmiki ramayan sloka 1 10 31-2 - 32-1.pptm

Srimad Vālmīki Rāmāyaṇa | Bāla Kāṇḍa

ऋष्यशृङ्गस्याङ्गदेशानयनप्रकारः नाम सर्ग:/ ரிஷ்யஶ்ருங்கஸ்யாங்‌கதேசாநயனப்ரகார: நாம சர்கஹ/ ṛṣyaśṛṅgasyāṅgadeśānayanaprakāraḥ namah Sargaha 10

In this Sarga, Sumantra narrates to King Daśaratha how King Rōmapāda of Aṅga, afflicted by a severe famine, succeeded in bringing the ascetic Ṛṣyaśṛṅga to his kingdom by sending courtesans to lure him from the forest. Upon Ṛṣyaśṛṅga’s arrival, copious rains fell, ending the famine, and King Rōmapāda thereafter gave his daughter Śāntā in marriage to the sage

இந்த ஸர்கத்தில், அமைச்சர் சுமந்திரர், அயோத்தியாவின் அரசன் தசரதனிடம், அங்க நாட்டின் அரசன் ரோமபாதன் எவ்வாறு கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீட்க, வனத்தில் தவம் செய்து வந்த முனிவர் ரிஷ்யஸ்ரிங்கரை அரசவைக்கு அழைத்து வந்தான் என்பதை விவரிக்கிறார். அவனை வரவழைக்க அரசன் அழகிய கணிகையரை அனுப்பினார். ரிஷ்யஸ்ரிங்கர் அங்க நாட்டில் காலடி வைத்தவுடன் பெருமழை பெய்து பஞ்சம் நீங்கியது. பின்னர் அரசன் ரோமபாதன் தனது மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடித்தார்.

Sloka 31-2 – 32-1


अर्घ्यं च प्रददौ तस्मै न्यायतस्सुसमाहितः
वव्रे प्रसादं विप्रेन्द्रान्मा विप्रं मन्युराविशेत्
arghyaṁ ca pradadau tasmai nyāyatas susamāhitaḥ
vavre prasādaṁ viprendrān mā vipraṁ manyur āviśet
அர்க்யம் ச பிரததௌ தஸ்மை ந்யாயதஸ் சுசமாஹித:
வவ்ரே பிரசாதம் விப்ரேந்த்ரான் மா விப்ரம் மன்யுராவிஷேத்

With composed mind and full devotion, the king, observing sacred propriety, offered the honorific Arghya to that foremost among Brāhmaṇas, R̥ṣyaśṛṅga, the Indra among sages. Thereafter, with heartfelt reverence, he humbly besought his grace and beneficence, praying that no anger might arise in the Brāhmaṇa, nor the wrath of his father Vibhaṇḍaka be incurred, should the bringing of the sage to the land of Aṅga become known
மனமும் உள்ளமும் ஒருமுகப்படச் செய்து, முறையான மரபின்படி, அந்த பிராமணர்களில் சிறந்தவரான ரிஷ்யஶ்ரிங்க முனிவருக்கு அர்க்யத்தை பக்தியுடன் அரசன் சமர்ப்பித்தான். பின்னர் ஆழ்ந்த மரியாதையுடன் அவனது அருளையும் அனுக்ரஹத்தையும் வேண்டினான். ரிஷ்யஶ்ரிங்கரும், அவரின் தந்தை விபாண்டக முனிவரும் கோபம் கொள்ளாதிருக்க வேண்டும்; அங்கதேசத்திற்காக அவரை அழைத்துச் சென்ற செயல் பின்னர் வெளிப்பட்டாலும், எந்த வித சாபமோ கோபமோ உண்டாகாதிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

PadacchedaEnglishTamilMeaning
सुसमाहितःsusamāhitaḥசுசமாஹித:With all his heart and mind
न्यायतःnyāyataḥந்யாயதஸ்according to propriety / righteously
प्रददौpradadauபிரததௌoffered
तस्मैtasmaiதஸ்மைto him
अर्घ्यंarghyamஅர்க்யம்arghya (honorific offering of water)
caand
वव्रेvavreவவ்ரேbesought / prayed
प्रसादम्prasādamபிரசாதம்grace / favor
विप्रेन्द्रात्viprendrātவிப்ரேந்த்ராத்from the lord of Brāhmaṇas (Rsyasringa)
विप्रंvipramவிப்ரம்the Brāhmaṇa (Vibhandaka)
माமாnot
आविशेत्āviśetஆவிஷேத்he would not be 
मन्युःmanyuḥமன்யு:Anger